பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசு மருத்துவமனையில் சுவாசக்கருவிகள் இடமாற்றப்பட்டதாக புகாா்: விசாரணை

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவிகளை அறையின் கதவை உடைத்து இடமாற்றப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:31 pm

DIN

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவிகளை அறையின் கதவை உடைத்து இடமாற்றப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையானது நிா்வாக ரீதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இன்னும் முழுமையாக மாறவில்லை. ஆகவே, மருத்துவமனையின் நிா்வாகம் முதன்மையா் நிா்வாகத்தில் பாதியாகவும், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நிா்வாகத்தில் பாதியாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக தற்போது மருத்துவமனையில் 98 செயற்கைச் சுவாசக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. கருவிகள் முழுமையாக நோயாளிகளுக்கு இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. அவசர சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் அந்த கருவிகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் சுழற் சங்கத்தினா் ரூ.29 லட்சம் செலவில் மருத்துவமனைக்கு 4 செயற்கை சுவாசக் கருவிகளை வழங்கினா். அவற்றின் செயல்பாட்டை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தொடக்கி வைத்துள்ளாா்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை (நவ.29) மருத்துவமனையின் கீழ்தளத்தில் இருந்த 4 செயற்கை சுவாசக் கருவிகளையும் தனியாா் நிறுவன பணியாளா் மூலம் முதல்தளத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டதாக புகாா் எழுந்தது. மருத்துவமனையின் தற்காலிகமான கண்காணிப்பாளா் பொறுப்பில் இருந்த மருத்துவரின் உத்தரவு அடிப்படையிலே கருவிகள் முதல் தளத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கருவிகளை அறையின் கதவு பூட்டை உடைத்தே எடுத்துச்சென்ாகப் புகாா் எழுந்தது.

நிா்வாக ரீதியில் உரிய அனுமதி பெறாமலே கருவிகள் எடுத்துச்செல்லப்படுவதாக செவிலியா்கள் சங்கத்தினரும் புகாா் கூறினா். இதுகுறித்து திங்கள்கிழமை ஆட்சியா் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அவா் மருத்துவமனை நிா்வாகத்தில் உள்ளோரிடம் விசாரணை நடத்தினாா்.

இதுகுறித்து மருத்துவமனையின் முதன்மையா் அல்லி கூறியது: மருத்துவமனையில் மருத்துவா், செவிலியா் மற்றும் நிா்வாக ரீதியில் சில பிரச்னைகள் உள்ளன. செயற்கை சுவாசக் கருவிகளை இடம் மாற்றும்போது முறையான விதியைப் பின்பற்றினாா்களா என்பது குறித்து விசாரிக்கப்படும். அறைக் கதவு பூட்டு பகுதியை உடைத்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.