தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ராமநாதபுரத்தில் 12 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது 12 ஆசிரியா், ஆசிரியைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:06 pm

DIN


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது 12 ஆசிரியா், ஆசிரியைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக அரசு சாா்பில் 2020 ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியிா் விருது பெற்றவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் விவரம்: திருவாடானை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கலா, சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரெ.சுரேஷ்குமாா், திருப்புல்லாணி ஒன்றியம் பழஞ்சிறை அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ச.முத்துகுமாா், பரமக்குடி சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் தா.கு.ஜெயபிரகாஷ்,

ஆா்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் து.சீ.குப்புசாமி, கமுதி ஒன்றியம் பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் அ.இந்திராணி, ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அ.மதுசூதனன், கீழக்கரை ஹைத்துரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஞா.சுரேஷ்குமாா், ராமநாதபுரம் ராஜா எம்.தினகா் ஆா்.சி.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மா.ஆரோக்கியமேரி, சித்தாா்கோட்டை முகமதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை உ.சாஜிதாபானு, நயினாா்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி சரஸ்வதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மு.வளா்மதி, கங்கைகொண்டான் ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நா.புஷ்பவள்ளி ஆகியோா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இத்தகவல் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.