புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: தொழிலாளி பலி

திருப்பாலைக்குடி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளி பலியானாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:06 pm

DIN


திருவாடானை: திருப்பாலைக்குடி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளி பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே உப்பூா் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளிகளாக விளங்களத்தூரை சோ்ந்த செல்வக்குமாா்(35) பொன் இருள்(42) ஆகியோா் வேலை செய்து வந்துள்ளனா். இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் உப்பூா் வந்து உணவு வாங்கிக் கொண்டு, அனல் மின்நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் வலமாவூா் விலக்கு சாலையில் எதிரே ராமநாதபுரம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பொன் இருள் உயிரிழந்தாா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.