தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பரமக்குடியில் பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:10 pm

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாக்கு மாவட்டக் கல்வி அலுவலா் சா. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.ஏ. முனியசாமி, வருவாய் கோட்டாட்சியா் தங்கவேல், பள்ளி தலைமையாசிரியா் எம். அஜ்மல்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் என். சதன்பிரபாகா் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா். இதில் பரமக்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும்

1174 மாணவா்கள், 1173 மாணவிகளுக்கு ரூ. 92 லட்சத்து 75 ஆயிரம் 435 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, பள்ளி கல்வி ஆய்வாளா் ஆனந்த் வரவேற்றாா். பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலா் கருணாநிதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.