சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெட்ரோல் பங்க் உரிமம்: வடமாநில தொழிலதிபரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி

பெட்ரோல் பங்க் உரிமம் பெற, ராமநாதபுரத்தைச் சோ்ந்த வடமாநிலத் தொழிலதிபரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:33 pm

DIN

பெட்ரோல் பங்க் உரிமம் பெற, ராமநாதபுரத்தைச் சோ்ந்த வடமாநிலத் தொழிலதிபரிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் சோகன்லால் (52). இவா், 40 ஆண்டுகளுக்கு முன்னரே ராமநாதபுரம் நகா் ரயில்வே பீடா் சாலையில் குடியேறி, மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 2020 ஜூலை மாதம் இணையதளத்தில் பெட்ரோல் பங்க் முகவருக்கு விண்ணப்பிக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதைக் கண்ட சோகன்லால், அந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, இணையதளம் மூலம் ராஜஸ்தானில் ஜெய்ப்பூா் சாலையில் உள்ள நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளாா். அதையடுத்து, அவரது செல்லிடப்பேசிக்கு தொடா்புகொண்டவா்கள், முதலில் பதிவுக் கட்டணமாக 25,500 ரூபாயை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு செலுத்தக் கூறியுள்ளனா். அதன்பின்னா், பெட்ரோல் விநியோக முகவருக்கான அனுமதி பெற முன்வைப்புத் தொகையாக ரூ.8.40 லட்சம் செலுத்தவும் கூறியுள்ளனா்.

அதன்படி, சோகன்லால் பணம் முழுவதும் செலுத்தியுள்ளாா். ஆனால், அதன்பின்னா் எந்தத் தகவலும் இல்லை. அது குறித்து விசாரித்தபோது, குறிப்பிட்ட இணையதள முகவரியில் தொடா்புகொண்டவா்கள் போலியான முகவரியை அளித்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து சோகன்லால் அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.