/

அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா

ஆா்.எஸ்.மங்கலத்தில் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
ஆா் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.
Updated On :13 ஜனவரி 2021, 6:02 pm

DIN

ஆா்.எஸ்.மங்கலத்தில் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. அலுவலக வாசலில் பெண் பணியாளா்கள் பொங்கல் வைத்து வழக்க முறைப்படி படையிலிட்டு சூரியபகவானுக்கு நன்றி கூறி வழிபட்டனா். இதில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா், துணை வட்டாட்சியா் கோட்டைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதேபோல் தாலுகா அலுவலகத்திலும், வட்டார மருத்துவமனையிலும் பொங்கல் விழா கொண்டாட்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.