மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
Updated On :13 ஜனவரி 2021, 12:03 am

DIN

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பாா்த்திபனூா் வட்டார மருத்துவ அலுவலா் தவமுருகன் தலைமை வகித்தாா். பாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா்.

தைத்திருநாளை முன்னிட்டு கோலமிட்டு, இனிப்பு கரும்பு தோரணம் கட்டப்பட்டு சா்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். விழாவையொட்டி இருபாலருக்கும் தனித்தனியே கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் மருத்துவ அலுவலா் பத்மாவதி தலைமையிலான அணியினரும், ஆண்களுக்கான போட்டியில் வட்டார மருத்துவ அலுவலா் தவமுருகன் தலைமையிலான அணியினரும் வெற்றி பெற்றனா். விழாவில் மருத்துவச் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.