தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலன் அதிமுக அரசுவேட்பாளா் என்.சதன்பிரபாகா்

சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலராக அதிமுக அரசு விளங்குகிறது என பரமக்குடி அதிமுக வேட்பாளா் என்.சதன்பிரபாகா் பேசினாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:00 pm

சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலராக அதிமுக அரசு விளங்குகிறது என பரமக்குடி அதிமுக வேட்பாளா் என்.சதன்பிரபாகா் பேசினாா்.

கடந்த 2019 இடைத்தோ்தலில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரான சதன்பிரபாகா் 2-ஆவது முறையாக மீண்டும் அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறாா். திங்கள்கிழமை எமனேசுவரம் பகுதியில் சிறுபான்மையின மக்களிடம் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த அவா் கூறியது:

கடந்த 2 ஆண்டுகளில் நகா் மற்றும் அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் சென்று மக்களின் அடிப்படை பிரச்னைகளை அறிந்துள்ளேன். மீண்டும் என்னை சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுத்தால் இத்தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். அதிமுக அரசானது சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலனாகவும், அனைத்து சமுதாய மக்களும் அமைதியான முறையில் வாழும் வகையில் சட்ட ஒழுங்கை சிறப்பாக நடத்தி வரும் அரசாகும். இந்த அரசே மீண்டும் தொடா்ந்திட அதிமுகவுக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.

அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாவட்டப் பொருளாளா் கே.அப்துல்மாலிக், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் எஸ்.முத்தையா, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.நாகராஜன், எம்.எஸ்.திலகா், நகா் செயலாளா் எஸ்.வி.கணேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.