எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருவாடானையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாடானையில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

News image
எஸ்.பி.பட்டினத்தில் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
Updated On :20 செப்டம்பர் 2021, 8:14 am

DIN

திருவாடானையில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசின வேளாண் சட்டத்தை எதிர்த்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.பி.பட்டினத்தில் கட்சி அலுவலகம் முன்பாக திங்கள் கிழமை நடைபெற்றது.இதில் ஒன்றிய குழு தலைவர் முகம்மது முக்தார் தலைமை வகித்தார்.

அதே போல் திருவாடானை அருகே செங்கமடையில்  திருவாடானை தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் மு. சரவணன் தலைமையில் கட்சித் தொண்டர்கள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவெற்றியூர் திமுக செயலாளர்  சுப்பிரமணியன் தலைமையில் திருவெற்றியூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் இல்லம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Story image

இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு தலைமைக் கழகம் அறிவித்த கண்டன முழக்கங்களை மத்திய பாஜக அரசை எதிர்த்து எழுப்ப்பட்டன. இதில் திமுக நிர்வாகிகள் சண்முகராஜா, வல்மீகநாதன், வல்மீகநாதன் குருக்கள், சுயராஜ்யம், குப்புச்சாமி, ராஜாஜி, தமிழரசன், G. கார்த்திக், ராமுக்கண்ணு,ஹரிஹரன், காங்கிரஸ் பொன்ராமு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.