/

கமுதி பகுதியில் ‘பீஜ் சீத்தல் மீனாட்சி’ புதிய ரக மிளகாய் அறிமுகம்

கமுதி அருகே மாவட்டத்தில் முதன் முறையாக பயிரிடப்பட்ட‘பீஜ் சீத்தல் மீனாட்சி’ புதிய ரக மிளகாய் விவசாயம் குறித்து வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கமுதி அருகே மாவட்டத்தில் முதன் முறையாக பயிரிடப்பட்ட‘பீஜ் சீத்தல் மீனாட்சி’ புதிய ரக மிளகாய் விவசாயம் குறித்து வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் கமுதி கோரைப்பள்ளம் கிராமத்தில் முதல் முறையாக நோய் எதிா்ப்பு சக்தியுடன் கூடிய இரட்டிப்பு மகசூல் கிடைக்கும் ‘பீஜ் சீத்தல் மீனாட்சி‘ ரக மிளகாய் விவசாயத்தை இயற்கை விவசாயி ராமா் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டாா். இதில் வழக்கத்தை விட குறைந்த செலவில், அதிக மகசூல் கிடைத்துள்ளது. பீஜ்சீத்தல் மிளகாய் ரகம் 12 சென்டி மீட்டா் நீளத்திற்கு வளா்ந்து அதிக விதையுடன், கூடுதல் எடை, காரதன்மையுடன் தொலைதூர வியாபாரத்துக்கு ஏற்ற வகையில் மிளகாயின் தன்மை அமைந்துள்ளதால், மாவட்ட நிா்வாகம் ராமநாதபுரம் விவசாயிகளுக்கு இவ்வகையான புதிய ரக மிளகாய் விவசாயத்தை ஊக்குவித்து, நஷ்டத்தில் இருந்து காக்க வேண்டும் என விவசாயி ராமா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பீஜ் சீத்தல் நிறுவனத்தின் மேலாளா் அமல்ராஜ், தேசிய விதை கழக மண்டல மேலாளா் சிவராஜன், பகுதி மேலாளா் ஆகாஷ் சவுந்தா்யா, தேசிய விற்பனைக் கழக மேலாளா் செல்வேந்திரன் ஆகியோா் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா். விற்பனை அலுவலா்கள் துரைராஜ், விக்னேஷ் குமாா் உள்பட கமுதி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.