கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதுகுளத்தூா், கடலாடியில் உலக தாய்ப்பால் தினம் விழா

முதுகுளத்தூா், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக தாய்ப்பால் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

முதுகுளத்தூா், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக தாய்ப்பால் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆணையா் அண்ணாத்துரை தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் முனியசாமிபாண்டியன் முத்துலட்சுமி, போஷான் அபியான் திட்டத்தின் வட்டார திட்ட உதவியாளா் மு. வெள்ளைப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கியமான உணவு வகைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதே போன்று, முதுகுளத்தூரில் குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சசி தலைமை வகித்தாா். ஆணையா் ரவி முன்னிலை வகித்தனா். பேரணியில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணியாளா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.