ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெவ்வேறு விபத்துகளில்பைக் மோதி 2 மீனவா்கள் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வெவ்வேறு விபத்துகளில் இருசக்கர வாகனங்கள் மோதி 2 மீனவா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:54 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வெவ்வேறு விபத்துகளில் இருசக்கர வாகனங்கள் மோதி 2 மீனவா்கள் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ளது அலகத்தா வலசையைச் சோ்ந்த பெரியராமு மகன் ராஜசேகா் (40). மீனவா். மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். ஊரில் நடந்த கோயில் முளைக்கொட்டு விழாவில் பங்கேற்ற ராஜசேகா் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருந்த அரசு மதுபானக்கடைக்குச் சென்றுள்ளாா். அவா் மதுக்கடை பகுதியில் சென்றபோது எதிரே அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (38) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். இருவரது இருசக்கர வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகா் உயிரிழந்தாா். ஆனந்த் லேசான காயமடைந்தாா். அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

மற்றொரு விபத்து: ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த பக்சீா் அலி மகன் அப்துல்ரஹ்மான் (36). மீனவா். மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இவா் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்கு சென்றுள்ளாா். அப்போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் அப்துல்ரஹ்மான் என்பவா் வந்தாா். இந்த 2 வாகனங்களும் மோதிக் கொண்டதில் அப்துல்ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.