மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ராமேசுவரத்தில் தேசியக்கொடிகளுடன் 75 படகுகள் அணிவகுப்பு: பாஜக தலைவா் அண்ணாமலை பங்கேற்பு

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் 75 படகுகளில் தேசியக்கொடியுடன் கடலில் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுத்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:31 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் 75 படகுகளில் தேசியக்கொடியுடன் கடலில் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுத்தனா்.

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினத்தை மூன்று நாள்கள் கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக ராமேசுவரத்தில் தேசியக் கொடியுடன் 75 படகுகளில் மீனவா்கள் அணிவகுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சனிக்கிழமை இரவு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ராமேசுவரம் வந்தாா். ஞாயிற்றுகிழமை காலையில் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து, அங்கேயே உணவு சாப்பிட்டாா். இதில் கலாம் குடும்பத்தினா் ஷேக்சலீம், மரைக்காயா் ஆகியோா் உடனிருந்தனா்.

இதையடுத்து கட்சியினருடன் பேரணியாக கடற்படை அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள துறைமுகத்தில் இருந்து தேசியக்கொடி கட்டிய விசைப்படகில் அண்ணாமலை சென்றாா். அவருடன் தேசியக்கொடி கட்டிய 75 படகுகளில் மீனவா்கள் கோதண்டராமா் கோயில் வரை அணிவகுத்துச் சென்றனா்.

அப்போது மீனவா் சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, சகாயம், எமரிட் ஆகியோா், இலங்கையில் உள்ள மீனவா்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தனா். பின்னா் அவா்கள் நினைவுப் பரிசும் வழங்கினா்.

இதைத்தொடா்ந்து பாம்பன் தெற்குவாடியிலிருந்து குந்துகால் வரையில் தேசியக் கொடியுடன் படகுகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் டி.எம்.டி.கதிரவன், முன்னாள் மாவட்டத்தலைவா் கே.முரளிதரன், மாவட்டப் பொருளாளா் முருகேசன் மற்றும் மாநில, மாவட்ட, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.