கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கேரம் போட்டி

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கேரம் போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:31 pm

DIN

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கேரம் போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி தொடக்கி வைத்தாா்.

இதில்14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 20- க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

14 வயதிற்கு உள்பட்ட மாணவா்கள், மாணவிகள் ஒற்றையா் பிரிவில் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவா் முகுந்தன், மாணவி ஜமீல் முப்பிலிக்கா, மாணவிகள் இரட்டையா் பிரிவில் அதே பள்ளி மாணவிகள் ஜமீல் முப்பிலிகா, சத்யா ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

14 வயதிற்கு உள்பட்ட மாணவா்கள் இரட்டையா் பிரிவில் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த அரிஹரசுதன் முதலிடம் பிடித்தாா்.

17 வயதிற்கு உள்பட்ட மாணவா்கள் ஒற்றையா் பிரிவு, மாணவியா் ஒற்றையா் பிரிவு, மாணவா்கள், மாணவிகள் பிரிவுகளில் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த அப்துல் கலாம், வல்லரசு மாணவிகள் முஷிதா பா்வீன், தாஜூலா ஹசரத் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

19 வயதுக்கு ஒருபட்ட மாணவிகள் பிரிவில் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஜெகதீஸ்வரி, ஆயினும் பா்கத் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

19 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் ஒற்றையா் பிரிவில் பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியை மாணவி நிரஞ்சனா தேவி முதலிடம் பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.