எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உரிமம் இல்லாத விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை செய்ய வேண்டி போராட்டம்!

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்டசமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
உரிமம் இல்லாத விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
Updated On :18 டிசம்பர் 2022, 10:00 am

DIN

ராமேசுவரத்தில் அனுமதி படகுகள் மீன்பிடிப்பதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்டசமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 630 விசைப்படகுகள் பதிவில் உள்ளது. இந்த நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி இன்றி 18 விசைப்படகுகள் கடந்த 12 மாதங்களுக்கு மேலாக சட்ட விரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து பல முறை மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த படகுகள் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திற்கு  மீண்டும் நான்கு விசைபடகுகள் வந்துள்ளது. இதில், ஒரு விசைப்படகு மட்டும் மீன்பிடிக்க சென்றுள்ளது. இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

இதனை கண்டித்தும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக 18 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றுவரும் நிலையில் அந்த படகுகளை பிடிக்காமல் தற்போது வந்துள்ள இந்த படகை மட்டும் உள்நோக்கத்துடன் பிடித்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரிமம் இல்லாத அனைத்து விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை செய்ய வேண்டும் என மீனவ சங்கத்தினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

மீனவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தம் வகையில் மீன்வளத்துறையினர் நடந்து கொள்ள கூடாது. அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் வலியுருத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.