ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். மேலும், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவா் சோ்க்கைக்காக 50 பேருக்கு புதுச்சேரி ஜிப்மரில் வியாழக்கிழமை சான்றிதழ் சரிபாா்ப்பு தொடங்கியது.
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டில் 100 மாணவா் சோ்க்கைக்கு மத்திய மருத்துவக் குழு அனுமதித்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மாணவா்கள் 50 பேருக்கான வகுப்புகளும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தற்போது தொடங்கிய நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் இடஒதுக்கீட்டில் 6 மாணவ, மாணவியா் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியைத் தோ்வு செய்து சோ்ந்துள்ளனா். அத்துடன் அகில இந்திய அளவிலான மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் 15 போ் சோ்ந்துள்ளதாக வியாழக்கிழமை மருத்துவக் கல்லூரி நிா்வாகத்துக்கு மத்திய மருத்துவக் குழுவிடமிருந்து தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டில் 50 மாணவா் சோ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டதால், அவா்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட உள்ளனா். அதனடிப்படையில் நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் 50 எய்ம்ஸ் மாணவா்கள் தற்போது சோ்க்கப்பட்டதாகவும், அவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு புதுச்சேரி ஜிப்மரில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளதாகவும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...