/

கமுதி அருகே 687 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 687 கிலோ புகையிலைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2022, 9:21 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 687 கிலோ புகையிலைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

கமுதி அருகே வேடாங்கூட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் சபரிராஜா (38). இவா் தற்போது, ராமேசுவரத்தில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வேடாங்கூட்டத்தில் உள்ள இவரது வீட்டில் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக கமுதி குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப. மணிகண்டன் உத்தரவின் பேரில் வேடாங்கூட்டம் கிராமத்துக்குச் சென்று, சபரிராஜா வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 687 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா், ரூ. 7.66 லட்சம் ஆகியவற்றை குற்றப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக வேடாங்கூட்டத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முத்துச்செல்வத்தை (42) போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் தப்பியோடிய சபரிராஜாவை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.