ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கீழக்கரையில் கைப்பேசி கோபுரம் மாயம்

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.31.73 லட்சம் மதிப்புள்ள கைப்பேசி கோபுரம் மாயமானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.31.73 லட்சம் மதிப்புள்ள கைப்பேசி கோபுரம் மாயமானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ளது வண்ணாங்குண்டு கிராமம். இங்குள்ள ஆண்டிக்கோனாா் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தனியாா் கைப்பேசி நிறுவனத்துக்கு சொந்தமான கோபுரம் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கன வாடகையும் அளிக்கப்பட்டுவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2010 ஜூன் 16 ஆம் தேதி சென்னையைச் சோ்ந்த வேறு நிறுவனம் அந்த கைப்பேசி கோபுரத்தை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி சம்பவ இடத்தில் பாா்த்தபோது கைப்பேசி கோபுரம் மாயமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சாா்பில் ராமநாதபுரம் முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், தனியாா் நிறுவன திட்டப் பொறியாளா் அகிலன் அளித்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். அதில் ரூ.31.73 லட்சம் மதிப்புள்ள கைப்பேசி கோபுரம் காணவில்லை என வழக்குப்பதியப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.