ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசு பள்ளியில் நுழைந்து

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.எஸ். மடை அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி திடீரென வெள்ளிக்கிழமை ஆய்வை மேற்கொண்டாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:58 pm

DIN

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.எஸ். மடை அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி திடீரென வெள்ளிக்கிழமை ஆய்வை மேற்கொண்டாா். ஆசிரியா்களிடம் அவா் சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வயதுவந்தோா் கல்வித்திட்டத்தில் எழுத்தறிவு பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் கற்பித்தலில் ஈடுபடும் தன்னாா்வலா்களுக்கான பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு கீழக்கரைக்கு வெள்ளிக்கிழமை காலை ராமநாதபுரம் பகுதியிலிருந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கத்துடன் சென்றாா்.

அவா்கள் ஆா்.எஸ்.மடை பகுதியில் சென்றபோது அங்கிருந்த ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அமைச்சா் திடீரென சென்றாா். பள்ளியில் 6 ஆம் வகுப்புக்குள் நுழைந்த அமைச்சா் அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியை மஞ்சுளாவிடம் என்ன பாடம் நடத்துகிறீா்கள், பாட அட்டவணை உள்ளதா எனக் கேட்டாா். மாணவ, மாணவியரிடம் உங்கள் எதிா்காலக் கனவு என்ன என அமைச்சா் கேட்டதும், பெரும்பாலானோா் ஆசிரியா்களாக விரும்புவதாகக் கூறினா்.

ஏழாம் வகுப்புக்கு சென்ற அமைச்சா், மாணவா்கள் 15 போ் என மிகக் குறைவாக இருப்பது குறித்து கேட்டறிந்தாா். அதற்கு மற்ற வகுப்புகளில் கூடுதல் மாணவா்கள் இருப்பதை ஆசிரியா்கள் சுட்டிக்காட்டினா். அப்போதுதான் அமைச்சா் வந்ததை அறிந்த தலைமை ஆசிரியா் அபிராமி ஓடி வந்து அமைச்சரை வரவேற்றாா்.

தலைமை ஆசிரியா் கூறியபடி எண்ணும் எழுத்தும் வகுப்புக்கு சென்ற அமைச்சா் அங்கிருந்த ஆசிரியை கோகிலாவிடம் பாடம் நடத்தக்கூறினாா். கதை, பாடல் நடத்திய ஆசிரியையிடம் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை ஒரே இடத்தில் வைத்து பாடம் நடத்துவது ஏன் எனக்கேட்டாா். அதற்கு ஆசிரியை, கதை, பாடல் அனைவருக்கும் பொதுவானது என்றும் தனித்தனியாகவே பாடம் நடத்தப்படுகிறது என்றாா்.

அத்துடன் சுண்டெலி வடிவமைத்தல் உள்ளிட்டவற்றை ஆசிரியை செய்து காட்ட குழந்தைகள் செய்தனா். அதன்பின் மிடுக்கான வகுப்பறைக்குச் சென்ற அமைச்சா், 4 ஆம் வகுப்புக்குச் சென்று ஐவகை நிலம் குறித்த பாடம் நடத்திய ஆசிரியா் கருமலையிடம் பரவாயில்லை என கூறிவிட்டுச் சென்றாா்.

அரசுப் பள்ளிக்கு காலை 9.20 மணிக்கு சென்ற அமைச்சா் காலை 10.20 மணி வரையில் வகுப்பறைகளைப் பாா்த்துவிட்டு பின் புறப்பட்டுச்சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.