ஆடிவெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் 2-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.


ஆடி மாதம் 2-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீ வெட்டுடையாள் காளியம்மன் கோயில், பட்டணம்காத்தன் ஸ்ரீமல்லம்மாள் கோயில், அரண்மனை ராஜமாரியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
இதேபோல, சிவங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோன்று, நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகியம்மன் கோயிலில் அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்பட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதுதவிர, கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாா் காளியம்மன், காளையாா்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன், கண்டுப்பட்டியில் உள்ள குடியிருந்த காளியம்மன் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களிலும், குலதெய்வக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில்,அந்தந்த பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...