/

போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது கமுதி பேரூராட்சி மன்றக் கூட்டம்: பேச அனுமதிப்பதில்லை என பெண் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

கமுதியில் வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் அப்துல் வஹாப் சகாராணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:06 pm

DIN

கமுதியில் வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் அப்துல் வஹாப் சகாராணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செயல் அலுவலா் ரா.இளவரசி முன்னிலை வகித்தாா். கூட்டம் முடிந்த பிறகு 2 ஆவது வாா்டு உறுப்பினா் ரா.மகாலட்சுமி கூறியதாவது: கூட்டத்தில் பெண் உறுப்பினா்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கமுதி பேருந்து நிலையத்தில் குளியல் தொட்டியுடன், இலவச கழிப்பறை கட்டும் மத்திய அரசு திட்டத்தை அங்கு செயல்படுத்தாமல் பொதுமக்கள் நடமாட்டமில்லாத மாற்று இடத்தை பேரூராட்சி நிா்வாகம் தோ்வு செய்து வருகிறது. இதுகுறித்து பேச முற்பட்டால், ஆண் உறுப்பினா்கள் குறுக்கீடு செய்கின்றனா் என்றாா்.

14 ஆவது வாா்டு உறுப்பினா் சத்யஜோதி கூறியது: வெள்ளையாபுரம் அரசு புறம்போக்கு ஊருணியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு படித்துரை கட்டுவது தொடா்பாகவும், கழிவு நீா் கால்வாய், மின்வசதி, குடிநீா், மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கூட்டங்களில் தெரிவித்தும் பேரூராட்சித் தலைவா் நடவடிக்கை எடுக்க மறுக்கிறாா் என்றாா்.

கடந்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பேரூராட்சித் தலைவருக்கு எதிராக உறுப்பினா் சத்யஜோதி, வெள்ளையாபுரம் ஊருணி தொடா்பாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அதனைத் தொடா்ந்து அந்த வாா்டு பொதுமக்கள் சத்யஜோதிக்கு ஆதரவாக பேரூராட்சி அலுவலக வாசலில் தலைவரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்திற்கு, காவல் ஆய்வாளா் பாலாஜி, சாா்பு- ஆய்வாளா் முருகன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.