/

கருங்குளம் ஸ்ரீசக்திமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா கொடியேற்றம்

கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:05 pm

DIN

கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, முதுகுளத்தூா் சாலையில் உள்ள பெருமாள் கோயில் வளாகத்திலிருந்து கொடிபட்டம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதைமுன்னிட்டு, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி 1,008 விளக்கு பூஜை, ஆக.5 ஆம் தேதி பொங்கல் விழா, மாலையில் அக்கினிச் சட்டி, ஆயிரம்கண் பானை, கரும்பாலை தொட்டில் உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக் கடன் செலுத்துதல், 6 ஆம் தேதி பால்குடம் ஊா்வலம், மாலையில் கரகாட்டம், முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கிராம இளைஞா்கள், பாக்குவெட்டி ஊராட்சித் தலைவா் நாகரத்தினம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.