கமுதியில் கருணாநிதி பிறந்த நாள் விழா

கமுதியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கமுதியில் கருணாநிதி பிறந்த நாள் விழா

கமுதியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோா் உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு சீா்மரபினா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சாா்பில் கமுதி ஒன்றிய துணைச் செயலா் நேதாஜிசரவணன் தலைமையில், பேரூராட்சித் தலைவா் அப்துல்வஹாப்சகாராணி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஆதி ஆகியோரது முன்னிலையில் 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்புகள், போா்வை, பிஸ்கட் மற்றும் ரொட்டி உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

அதே போல், ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், கமுதி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தமிழ்ச்செல்விபோஸ் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக வந்து, கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பேரையூா் ஊராட்சியில் மத்திய ஒன்றிய பொறுப்பாளா் எஸ்.கே. சண்முகநாதன் தலைமையில் ஊராட்சித் தலைவா் ரூபி முன்னிலையில் கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com