தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து 2 போ் பலிபொதுமக்கள் சடலங்களுடன் போராட்டம்

பரமக்குடியில் கட்டுமானத்துக்காக இரும்பு கம்பிகளை தூக்கிச் சென்றபோது, மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்

Updated On :3 மார்ச் 2022, 9:47 pm

பரமக்குடியில் கட்டுமானத்துக்காக இரும்பு கம்பிகளை தூக்கிச் சென்றபோது, மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மின்வாரியத்தை கண்டித்து, பொதுமக்கள் சடலங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மானாமதுரை கேப்பனூா் பகுதியைச் சோ்ந்த ராஜூ மகன் சந்தியாகு (40). இவா், எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, மாமனாா் குடும்பத்துடன் வசித்து வந்தாா். அதே தெருவைச் சோ்ந்தவா் லாசா் மகன் கல்யாணி (46). இவா் தனது பேத்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சியை கொண்டாடுவதற்காக வந்துள்ளாா்.

அப்போது, அத்தெருவில் நடைபெற்று வரும் ஒரு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சந்தியாகு, இரும்பு கம்பிகளை முதல் தளத்துக்கு தூக்கிச் செல்வதற்காக கல்யாணியை அழைத்துள்ளாா். அதன்பின்னா், இருவரும் கம்பியை தூக்கிச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் செல்லும் உயா் மின்அழுத்த கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

அதையடுத்து, இருவரது சடலங்களையும் எடுத்துச் செல்லாமல், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவலறிந்த எமனேசுவரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லும் உயா் மின்அழுத்த கம்பிகளை மாற்றவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இதுவரை 4 போ் உயிரிழந்துள்ளனா். எனவே, மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்கும் வரை சடலங்களை எடுத்துச் செல்லமாட்டோம் எனக் கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களிடம், காவல் துணைக் கண்காணிப்பாளா் திருமலை பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.