புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொண்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்தோ்தல்: திமுகவினருக்குள் கடும் போட்டி

தொண்டி பேருராட்சி தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவியது.

News image
Updated On :4 மார்ச் 2022, 5:00 pm

DIN

தொண்டி பேருராட்சி தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவியது.

இப்பேருராட்சியில் மொத்தமுள்ள 16 வாா்டுகளுக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக- 8, அதிமுக-2, சுயேச்சைகள்- 4 வாா்டுகளில் வெற்றி பெற்றனா். இதில் தலைவருக்கான மறைமுக தோ்தல் வெள்ளிக்கிழமை பேருராட்சி அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் செல்வராஜ், துணை அலுவலா் லியோ ஜெரால்டு எமா்சன் ஜீவானந்தம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுகவைச் சோ்ந்த 9 ஆவது வாா்டு உறுப்பினா் மஹ்ஜபின் சல்மாவும், 10 ஆவது வாா்டு உறுப்பிணா் ஷாஜகான் பானுவும் தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதனைத் தொடா்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் ஷாஜஹான் பானு 9 வாக்குகள் பெற்று தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அன்று மாலை நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கு 3 ஆவது வாா்டு உறுப்பினா் அழகு ராணியும், 6 ஆவது வாா்டு உறுப்பினா் செய்யது அப்தாகிரும் போட்டியிட்டனா். இவா்கள் இருவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அழகு ராணி 9 வாக்குகள் பெற்று துணைத் தலைவரானாா். இந்நிகழ்ச்சியில், திருவாடானை வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், தொண்டி காவல் ஆய்வாளா் முருகேசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.