தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கடத்தல் கும்பலிடமிருந்து கைப்பற்றிய 2 சிங்கப் பற்கள்உண்மைத்தன்மை சோதனைக்கு நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிங்கப் பற்களின் உண்மைத்தன்மை குறித்து நீதிமன்றத்தின் அனுமதி

News image
Updated On :14 மே 2022, 12:40 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிங்கப் பற்களின் உண்மைத்தன்மை குறித்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஆய்வுக்கு உள்படுத்த வனத்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசூா் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த வாகன சோதனையின் போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை போலீஸாா் மடக்கினா். அப்போது அந்த வாகனங்களில் போதைப் பொருள் பொட்டலங்கள், 36 செம்மரக்கட்டைகள் , 2 சிங்கப்பற்கள், ஒரு மான் கொம்பு ஆகியவை போலீஸாா் கைப்பற்றினா். இதில் சிலா் தப்பிய நிலையில், பிடிபட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடத்தி வந்து, படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக அவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக 9 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சிலரை மட்டும் கைது செய்தனா்.

Story image

இதுதொடா்பாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினா் வழக்குப்பதிந்த நிலையில், மான்கொம்பு, சிங்கப் பற்கள், செம்மரக்கட்டைகளை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனா். ஆனால், அவற்றை வாங்க வனத்துறை மறுத்ததாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் காவல் துறையினா் சிங்கப் பற்கள், மான்கொம்பு, செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை ஒப்படைத்தனா்.

இதற்கிடையே வழக்குரைஞா் ஒருவா், சிங்கப் பற்கள் உள்ளிட்டவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடா்ந்தாா்.

அதனடிப்படையில் அவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி புதுக்கோட்டை நீதிமன்றத்திலிருந்து திருவாடானை முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி சிங்கப் பற்கள், மான் கொம்பு, செம்மரக்கட்டைகள் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பற்களின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கு சென்னையில் உள்ள ஆய்வு மையத்துக்கு, அவற்றை அனுப்ப நடுவா் மன்றத்தின் அனுமதி கோரப்பட உள்ளது. அந்த அனுமதி கிடைக்கும்பட்சத்தில் சிங்கப்பற்கள் இரண்டும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள்கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.