தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தூய்மைப் பணியாளா் மீது தாக்குதல்

 ராமநாதபுரத்தில் மது வாங்கித்தரக்கோரி தூய்மைப் பணியாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

News image
Updated On :14 மே 2022, 12:39 am

DIN

 ராமநாதபுரத்தில் மது வாங்கித்தரக்கோரி தூய்மைப் பணியாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

ராமநாதபுரம் காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (45). ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வரும் இவா், கடந்த வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நின்றி கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணன், புல்லாணி ஆகிய இருவரும் வெள்ளைச்சாமியிடம் மது வாங்கித்தருமாறு கேட்டுள்ளனா். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என வெள்ளைச்சாமி கூறியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் வெள்ளைச்சாமியை கம்பால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கேணிக்கரை போலீஸாா், பாலகிருஷ்ணன், புல்லாணி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.