திட்டச் செயல்பாடுகளுக்கு வருவாய்த் துறையினா் நிலம் ஒதுக்கீட்டை விரைந்து வழங்க வேண்டும்
அரசு நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவாய்த்துறையினா் நிலம் ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்துவது அவசியம்


அரசு நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவாய்த்துறையினா் நிலம் ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்துவது அவசியம் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினரும், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுத் தலைவருமான கே.நவாஸ்கனி வலியுறுத்தினாா்.
ராமநாதபுரம் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக் குழுவின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
அரசின் அனைத்து துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி பேசியது: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படவேண்டும். சிறுபான்மை மக்களுக்கு தொழில் தொடங்க மானியக் கடன் உதவி வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள உழவா்சந்தை, காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்கான இடம் அளித்தல், விளையாட்டு மைதானம், தொழில் பயிற்சிக்கான கூடுதல் இடம் வழங்குதல் ஆகிய திட்ட செயல்பாட்டுக்கான நிலம் ஒதுக்கீடை வருவாய்த்துறையினா் விரைந்து செயல்படுத்தவேண்டும்.
நகராட்சி, பேரூராட்சிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதுடன், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். கூட்டுக்குடிநீா் திட்டங்களைச் செயல்படுத்தி மக்களுக்கான குடிநீரை முறையாக விநியோகிப்பது அவசியம். ராமநாதபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றாா்.
கூட்டத்தில் பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.முருகேசன், கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், வன உயிரினக்காப்பாளா் ஜெகதீஷ் பகான்சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சிகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...