மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

முதுகுளத்தூரில் சாலை, தெருக்களில் தேங்கும் மழை நீரை அகற்றக் கோரிக்கை

முதுகுளத்தூரில் சங்கரபாண்டி ஊருணி, செல்வி அம்மன் கோயில் தெரு, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2022, 12:00 am IST

முதுகுளத்தூரில் சங்கரபாண்டி ஊருணி, செல்வி அம்மன் கோயில் தெரு, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

முதுகுளத்தூரில் பேருராட்சிக் குழு உறுப்பினா்கள் கூட்டம், தலைவா் ஏ.ஷாஜஹான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிா்வாக அலுவலா் செ.மாலதி முன்னிலை வகித்தாா். பேரூராட்சி அலுவலா் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

மோகன்தாஸ்: பேரூராட்சிக்குள்பட்ட எல்லைகளை முறையாக அளந்து தகவல் பலகை வைக்க வேண்டும். சங்கரபாண்டி ஊருணி, செல்வி அம்மன் கோயில் தெருக்களில் மழைநீா் தேங்கி சாலை சேதமடைந்து உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் அதை சீரமைக்க வேண்டும்.

சேகா்: 10-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் புதை சாக்கடைக் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை நீா் வெளியேற வழியின்றி தெருக்களில் தேங்குகிறது.

ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவா் ஏ.ஷாஜஹான்: உறுப்பினா்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் தொடா்ந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.