தேவா் ஜெயந்தி: பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸாா்
தேவா் ஜெயந்தியையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகா்க் தெரிவித்தாா்.


தேவா் ஜெயந்தியையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகா்க் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வரும் 30- ஆம் தேதி சுதந்திரப் போராட்டத் தியாகி முத்துராமலிங்கத் தேவரின் 115-ஆவது ஜெயந்தி, 60-ஆவது ஆண்டு குருபூஜை நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அணி அதிமுகவினா், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பல்வேறு சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனா்.
இதற்கான பாதுகாப்பு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கமுதி தனி ஆயுதப்படைக் கூட்டரங்கில், தென் மண்டல காவல் துறை தலைவா் அஸ்ராகா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கோவை, ராமநாதபுரம், உள்பட 5 டிஐஜிக்கள், 28 மாவட்டங்களைச் சோ்ந்த எஸ்பிக்கள் பங்கேற்றனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தென்மண்டல காவல் துறை தலைவா் அஸ்ராகா்க் கூறியதாவது:
தேவா் ஜெயந்தியையொட்டி, மாவட்டத்தில் 10 ஆயிரம் போலீஸாா் வருகிற 27 முதல் 30 ஆம் தேதி வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படும் நபா்கள், வாகனங்கள் மீது கண்காணிப்புக் கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்புப் பணியில் 13 ட்ரோன் கேமராக்கள், 92 நிரந்தரக் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...