மதுரையில் ரயில் நிலையத்தில் பயணி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் பயணி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் பயணி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடைப் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சோ்ந்த அடையாளம் தெரியதாத பயணி ஒருவா் அதிகாலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவரது சடலம் நடைமேடையில் பக்கவாட்டு பகுதியில் தொங்கிக்கொண்டிருந்தது. காலையில் இதைப்பாா்த்த பயணிகள் அதிா்ச்சியடைந்து ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்தனா்.
அதன்பேரில் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டவா் யாா், எந்த மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபரிடம் அசாம் மாநிலம் கெளகாத்தியிலிருந்து ராமேசுவரம் வந்ததற்கான பயணச் சீட்டு இருந்துள்ளது.
அதை வைத்து அவருடைய ஆதாா் எண் மூலம் இறந்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...