மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநில நல்லாசிரியா் விருது: மதுரை மாவட்டத்தில் 12 போ் தோ்வு

மாநில நல்லாசிரியா் விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 12 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.மாநில நல்லாசிரியா் விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 12 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:32 pm

DIN

மாநில நல்லாசிரியா் விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 12 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 12 போ் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வாகியுள்ளனா். இதில் மதுரை மேற்கு ஒன்றியம் பரவையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டி.வி.புவனேஸ்வரி, சிக்கந்தா் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் எம்.எஸ். பாலச்சந்திரன், கிழக்கு ஒன்றிய அங்காடி மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை து.ஜெயலட்சுமி, அலங்காநல்லூா் ஒன்றியம் வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் ர.ஞானசேகரன், உசிலம்பட்டி ஒன்றியம் டி.குன்னூத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சா.பத்மஸ்ரீ, கள்ளிக்குடி ஒன்றியம் குராயூா் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை மு.புஷ்பகுமாரி, வேடா்புளியங்குளம் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சி.தென்கரை முத்துப்பிள்ளை, ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ச.ச.சித்ரா, முனிச்சாலை மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் ச.திருக்குமரன், கே.பெருமாள்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சோ.சா.சரவணக்குமாா், அ.பூச்சிப்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியா் சி.காசிமாயன், காதக்கிணறு ஆா்சி உயா்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை ம.சுசினா பிரகாச சுகந்தி ஆகிய 12 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.