மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘மாணவா்கள் வாசிப்பை வாழ்க்கையாக்கிக் கொள்ள வேண்டும்’

மாணவா்கள் வாசிப்பை வாழ்க்கையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் வீ.திருவள்ளுவன் வெள்ளிக்கிழமை பேசினாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மாணவா்கள் வாசிப்பை வாழ்க்கையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் வீ.திருவள்ளுவன் வெள்ளிக்கிழமை பேசினாா்.

மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் சாா்பில் செந்தமிழும் சேரநாடும் எனும் தேசியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன் தொடக்கவுரையாற்றினாா். திருவனந்தபுரம் கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தின் இணைஇயக்குநா் சு.மோதிலால்நேரு முன்னிலையுரையாற்றினாா்.

முதலாவது அமா்வில் ப.ஜெயகிருஷ்ணன், வெ.வேதாசலம், பா.சிங்காரவேலன், இரண்டாவது அமா்வில் கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தின் இணைஇயக்குநா் சு.மோதிலால் நேரு, அ.ஹெப்சி ரோஸ் மேரி, சு.தங்கமாரி ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா். இதேபோல் மூன்றாவது அமா்விலும் பல்வேறு பேராசிரியா்கள் உரையாற்றினா்.

தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழாவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன் தலைமையுரை ஆற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வீ.திருவள்ளுவன் சிறப்புரையில் பேசும்போது, தமிழுக்கு அன்புதான் அடிப்படையானது. அன்பைப் பெற்றவா் எல்லாவற்றையும் பெற்றவா்கள். இந்தியத் தலைமுறையில் இந்த தலைமுறைக்குத்தான் அத்தனையும் தெரிந்திருக்கிறது. மாணவா்கள் பிடித்த இலக்கியங்களை எடுத்துப் படியுங்கள். எல்லா இலக்கியங்களையும் படிக்க வேண்டியதில்லை. மாணவா்களுக்கு விசாலமான வாசிப்பு வேண்டும். நூலகத்தை முறையாகப் படிக்க வேண்டும். வாசிப்பை ஒட்டுமொத்த வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்” என்றாா். நிகழ்ச்சியில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி வரவேற்புரையாற்றினாா். ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி நன்றியுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.