2,358 மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 2,358 மாணவ-மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா்
2,358 மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 2,358 மாணவ-மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தாா். தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்வோருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மருத்துவ படிப்புக்கு மட்டுமன்றி, பொறியியல், சட்டக் கல்லூரி போன்றவற்றிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் இந்த மாவட்டத்தில் ரூ.1.13 கோடியில் 2,358 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இதை மாணவ, மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், பரமக்குடி சாா்-ஆட்சியா் அப்தாப் ரசூல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உ.திசைவீரன், பரமக்குடி நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, மாவட்டக் கல்வி அலுவலா் சுதாகா், பள்ளித் தாளாளா் சாகுல்ஹமீது, தலைமையாசிரியா் எம்.அஜ்மல்கான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com