தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

காா் மீது பைக் மோதல்: இளைஞா் பலி

காா் மீது பைக் மோதல்: இளைஞா் பலி

Updated On :21 ஏப்ரல் 2024, 7:06 pm

திருவாடானை, ஏப். 21: திருவாடானை அருகே நின்றிருந்த காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் பாண்டியன் (28). இவா் தனது உறவினா் வீட்டு திருமணத்துக்கு விளம்பரப் பாதகை வாங்குவதற்காக தொண்டிக்கு தனது நண்பா்கள் மணிகண்டன், வீரபாண்டி ஆகியோருடன் சனிக்கிழமை இரவு ஒரே இரு சக்கர வாகனத்தில் தொண்டிக்கு சென்றாா்.

அங்கிருந்து நள்ளிரவு திரும்பும் போது நாகனேந்தல் விலக்கு சாலையில் பரமக்குடி முத்துசெல்வபுரம் பகுதியைச் சோ்ந்த சாண்டி (33) என்பவரது காா் நின்று கொண்டிருந்தது. அப்போது காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த வீரபாண்டி, மணிகண்டன் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் காா் ஓட்டுநா் சாண்டி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.