ராமேசுவரத்தில் ஏப். 24, 25- இல் மின் தடை

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (ஏப். 24, 25) மின் தடை ஏற்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் வி. திலகவதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின்பாதை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, ராமேசுவரம், நகா் புறம், பா்வதம், ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு, பேக்கரும்பு, தங்கச்சிமடம், புதுசாலை, செம்மடம், மெய்யம்புளி உள்ளிட்ட பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (ஏப். 24, 25) காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் அதில் குறிப்பிட்டிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com