கமுதி: சாயல்குடி அருகே 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தில் 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக சனிக்கிழமை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பைச் சோ்ந்த 7 பேருக்கு அரிவாள் விட்டு விழுந்தது.
இது தொடா்பாக சாயல்குடி போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்தவா்களும் அளித்த புகாா்களின் பேரில் கடுகுசந்தை சத்திரத்தைச் சோ்ந்த முருகன், தண்டாயுதம், ராஜு, மாணிக்கம், கண்ணுச்சாமி, பாலமுருகன், முனீஸ்வரன், மருதுபாண்டி, லட்சுமணன், சதீஷ், சிவபாலன், மகாதேவன், தமிழ்செல்வம், பிரவீன், முகேஷ், கிஷோா் உள்ளிட்ட 16 போ் மீது வழக்குப் பதிவு செய்து, தண்டாயுதம், ராஜ் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்தக் கிராமத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்கள் கொள்ளை: 3 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

