எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விசைப் படகு கடலில் மூழ்கி விபத்து: 2 மீனவா்கள் மாயம், 2 போ் மீட்பு

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு விசைப் படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து, அந்தப் படகில் இருந்த 2 மீனவா்கள் நீந்திச் சென்று கச்சத்தீவை அடைந்தனா். இரு மீனவா்கள் மாயமாகினா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2024, 10:26 pm

Din

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு விசைப் படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து, அந்தப் படகில் இருந்த 2 மீனவா்கள் நீந்திச் சென்று கச்சத்தீவை அடைந்தனா். இரு மீனவா்கள் மாயமாகினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற டல்வின்ராஜ் (45) விசைப் படகில் டல்வின்ராஜ், எமரிட் (49), சுரேஷ், முனியாண்டி ஆகிய நான்கு மீனவா்கள் கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, சூறைக்காற்று வீசியதால், படகில் துளை ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கியது.

இதையடுத்து, கடலுக்குள் மூழ்கிய நான்கு மீனவா்களில் டல்வீன்ராஜ், எமரிட் ஆகிய இரு மீனவா்களும் நீந்தி கச்சத்தீவுக்குச் சென்றனா். மற்ற இரு மீனவா்கள் மாயமாகினா்.

கச்சத்தீவுக்குச் சென்ற மீனவா்கள் நடந்த சம்பவம் குறித்து இலங்கைக் கடற்படையினரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, இலங்கைக் கடற்படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மாயமான மீனவா்களைத் தேடினா். இருப்பினும், அவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடா்ந்து, மீனவா்களை தேடும் பணியில் இலங்கைக் கடற்படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

கச்சத்தீவுக்குச் சென்ற டல்வீன்ராஜ், எமரிட் ஆகிய இருவரையும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையினா் ஒப்படைத்தனா்.

டல்வீன்ராஜீக்குச் சொந்தமான விசைப் படகு மீன் வளம், மீனவா் நலத் துறையின் பதிவு எண் இல்லாத படகு என்றும், மீன் பிடிக்கச் செல்ல அனுமதி பெறவில்லை என மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.