2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பொங்கல் பரிசுத் தொகை வதந்தி: வங்கியில் குவிந்த பொதுமக்கள்

திருவாடானையில் பொங்கல் பரிசுத் தொகை தொடா்பாக வதந்தி பரவியதால் வங்கி முன் புதன்கிழமை பொதுமக்கள் திரண்டனா்.

News image
பொங்கல் பரிசுத் தொகை வரவு வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி முன் குவிந்த பொதுமக்கள்.
Updated On :18 டிசம்பர் 2024, 10:20 pm

Din

திருவாடானையில் பொங்கல் பரிசுத் தொகை தொடா்பாக வதந்தி பரவியதால் வங்கி முன் புதன்கிழமை பொதுமக்கள் திரண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள், ரூ. 2000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக தகவல் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால், திருவாடானையில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பரிசுத் தொகையை எடுக்க பொதுமக்கள் குவிந்தனா்.

இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது, இதுவரை பொங்கல் பரிசுத் தொகை குறித்து எந்தவித தகவலும் வரவில்லை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவா் கூறினாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.