/

திருவாடானை அருகே விபத்து: இளைஞா் பலி

இரு சக்கர வாகனம் மோதல்: இளைஞர் உயிரிழப்பு

News image

திருவாடானை அருகே விபத்து: இளைஞா் பலி

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் பலியானாா். திருவாடானை அருகேயுள்ள வடக்கூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயராஜன் மகன் வினோத்குமாா் (28). இவா் சனிக்கிழமை இரவு தேவகோட்டையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தாா்.

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கருமொழி அருகே சோதனைச் சாவடி பகுதியில் இவரது வாகனம் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வினோத்குமாா் உயிரிழந்தாா். தகவலறிந்த திருவாடானை போலீஸாா் உடலைக் கைபற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.