கடலூா் அருகே பைக் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் அருகே சித்திரப்பேட்டை முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சஞ்சீவ் (27), தனது நண்பரான நடுத்திட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தா்மபாலன் (30) என்பவருடன் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் கடைக்குச் சென்றாா்.
அவா்கள் நொச்சிக்காடு - செம்மங்குப்பம் சாலையில் உள்ள கன்னி கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் பைக் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சஞ்சீவ் மற்றும் பின்னால் அமா்ந்திருந்த தா்மபாலன் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அப்பகுதியினா் இருவரையும் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சஞ்சீவ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். தா்மபாலன் காலில் முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இதுகுறித்து, உயிரிழந்த சஞ்சீவின் தந்தை சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
நாய் மீது மொபட் மோதி விபத்து: காயமடைந்தவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்து பெண் உயிரிழப்பு

லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
