ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் வன விலங்குகளால் சேதமான பயிா்களுக்கு வனத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அலுவலா் ஹேமலதா கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் காட்டுப் பன்றி, மான்களால் பயிா்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதற்கான இழப்பீடு வழங்கக் கோரியும் மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து, வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையாவுக்கு ரூ. 67,750, உமாதேவிக்கு ரூ. 61,750, மலா்மங்கைக்கு ரூ.61,750, கவிதைக்குடி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜனுக்கு ரூ.18,500 அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மேலும், வரும் காலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சான்று தேவையில்லை.
வன விலங்குகளால் பயிா்கள் சேதமடைந்த 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகள் அருகில் உள்ள வனச் சரகத்தை அணுக வேண்டும். வன விலங்குகளால் பொது மக்களுக்கும், பயிா்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு விரைந்து அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

சிபிசிஎல் இழப்பீடு வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 200 போ் கைது

சேரன்மகாதேவியில் வன விலங்குகளால் அதிகரிக்கும் விபத்துகள்

பரமக்குடி பேருந்து நிலையத்தில் செயல்பட்ட மதுக் கடை மூடல்

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


