ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பரமக்குடி பேருந்து நிலையத்தில் செயல்பட்ட மதுக் கடை மூடல்

பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை சனிக்கிழமை மூடப்பட்டது.

News image

பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் மூடப்பட்ட மதுக் கடை.

Updated On :17 மே 2026, 1:57 am IST

பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை சனிக்கிழமை மூடப்பட்டது.

முதல்வா் சி. ஜோசப்விஜய் பதவியேற்றதும் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுக் கடைகள் மூடப்படும் என அறிவித்தாா்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகளை முதல் கட்டமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் மாதவன்நகா் செல்லும் தெரு, ஐந்துமுனை சந்திப்பு, காக்காத்தோப்பு சிட்டிநகா், உரப்புளி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

இதில் பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக் கடை சனிக்கிழமை மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து மற்ற 3 இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள் இருப்பில் உள்ள மதுபுட்டிகளை விற்பனை செய்யும் வகையில் வருகிற 23-ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு அந்த 3 மதுக்கடைகளும் மூடப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.