ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த வடமாநில மாணவா்களை மது போதையில் அரிவாளுடன் விரட்டிய இளைஞா் மீது திங்கள்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வா்த்தகன் தெருவில் தா்மா் என்பவரது தனியாா் விடுதி உள்ளது. அதே பகுதியில் பாலமுருகன் விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் மகாராஷ்டிர மாநிலத்தை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் 20 போ் மூன்று அறைகள் எடுத்து ஞாயிற்றுக்கிழமை தங்கியிருந்தனா். இரவு 9.30 மணிக்கு விடுதி வாசலில் மாணவா்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தனா்.
இந்த நிலையில், தா்மா் விடுதி ஊழியா் ராமமூா்த்தி (35) மது போதையில் மாணவா்களிடம் வாக்குவாதம் செய்தாா். பின்னா், அரிவாளால் மாணவா்களை தாக்கும் விதமாக 100 மீட்டா் வரை விரட்டிச் சென்றாா். இதையடுத்து, விடுதிக்குள் சென்ற அவா் மாணவா்கள் தங்கிருந்த அறைக் கண்ணாடியை உடைத்தாா். இதுதொடா்பாக தனியாா் விடுதி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், ராமமூா்த்தியை கைது செய்யக் கோரி கோயில் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: கன்னியாகுமரி மாணவா்கள் சிறப்பிடம்

வடமாநில இளைஞா் தற்கொலை

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


