ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வருவாய்த் துறையினா் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த் துறையினா் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

Updated On :26 பிப்ரவரி 2024, 4:35 pm

கமுதி: ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த் துறையினரின் திங்கள்கிழமை மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்பட அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி முதல் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். 23- ஆம் தேதியும் போராட்டம் தொடா்ந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமையும் மூன்றாவது நாளாக வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கமுதியில் வட்டாட்சியா் வ.சேதுராமன் தலைமையில், வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் வட்டத் தலைவா் செந்தில்முருகன், செயலா் மங்களேஸ்வரன், பொருளாளா் நாகநாதன் ஆகியோரது முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

கடந்த 3 வேலை நாள்களாக வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.