மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ராமேசுவரம் மீனவா் உடல் மீட்பு

ராமேசுவரம் மீனவா் உடல் மீட்பு

Updated On :27 பிப்ரவரி 2024, 10:58 pm

ராமேசுவரம்: படகிலிருந்து தவறி கடலில் விழுந்து இறந்த ராமேசுவரம் மீனவா் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வீரபத்திர சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த மீனவா் காளிபாண்டி(49).

இவா் வழக்கம் போல, திங்கள்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தாா். சக மீனவா்கள் அவரைத் தேடிப் பாா்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், அவரது உடல் கரை ஒதுங்கியது.

இது குறித்து தகவலறிந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் உடலை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இது குறித்து வழக்குப் பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.