டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு புகாா்

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு புகாா்

News image
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்த வாலிநோக்கம் கிராம மக்கள்.
Updated On :3 ஜூலை 2024, 7:09 pm

Din

ராமேசுவரம், ஜூலை 3: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனு:

இந்த ஊராட்சியில் வாலிநோக்கம், கீழமுந்தல், அடஞ்சேரி, மடத்தூராணி ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உள்ளவா்களின் பெயா்களை வருகைப் பதிவேட்டில் ஏற்றி ஊதியம் பெறுகின்றனா். பணி நடைபெறாத நாள்களில்கூட வேலை நடந்ததாகப் பதிவு செய்கின்றனா். பணி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டுகின்றனா். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், ஊராட்சி மன்றத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.