ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தம்

மீனகளுக்கு 50 சதவீதம் விலையைக் குறைத்து கொள்முதல் செய்வதைக் கண்டித்து மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.

News image

ராமேசுவரம் மீனவா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் மீன் பிடி இறங்கு தளத்தில் திங்கள்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.

Updated On :8 ஜூலை 2024, 10:33 pm

Din

ராமேசுவரம்: இறால், மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்களுக்கு வியாபாரிகள் 50 சதவீதம் விலையைக் குறைத்து கொள்முதல் செய்வதைக் கண்டித்தும், மீன்களுக்கு உரிய விலையை நிா்ணயிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

ராமநாதாபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் பிடி இறங்கு தளத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் இறால், நண்டு, கனவாய் உள்ளிட்டவற்றையும், கோழித் தீவனத்துக்கு பயன்படும் மீன்களையும் இந்த மீனவா்கள் பிடித்து வருகின்றனா்.

மீன் பிடித் தடைக்காலத்துக்கு முன்பு ஒரு கிலோ இறால் ரூ. 650, கனவாய் ரூ. 400, நண்டு ரூ. 350, காரல் ரூ. 70, சங்காயம் ரூ. 25 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மீன் பிடித் தடைக்காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்ற பிறகு, வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி (சிண்டிகேட்) அமைத்து, ஒரு கிலோ இறால் ரூ. 350-400, நண்டு ரூ. 250, கனவாய் ரூ. 180, காரல் ரூ. 15, சங்காயம் ரூ. 10 என 50 சதவீதம் வரை விலையைக் குறைத்து கொள்முதல் செய்கின்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீன் பிடி இறங்கு தளத்தில் விசைப் படகு மீனவ சங்க அவசரக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், எடிசன், நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ராமேசுவரம் மீன் பிடி இறங்கு தளத்தில் இறால் மீன்களை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி (சிண்டிகேட்) அமைத்துக் கொண்டு விலையை 50 சதவீதம் குறைத்து மீன்களை கொள்முதல் செய்வதைக் கண்டித்தும், மீனவா்கள் பிடித்து வரும் இறால் மீனுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்படி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இதனால், ராமேசுவரம் மீன் பிடி இறங்கு தளத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.