ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாசி மகம் விழா: படகுகளில் எழுந்தருளிய உற்சவ மூா்த்திகள்

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் உற்சவா் சுவாமிகள் எழுந்தருளி நடைபெற்ற மாசி மகத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய நடைபெற்றது.

News image
~
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் உற்சவா் சுவாமிகள் எழுந்தருளி நடைபெற்ற மாசி மகத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய நடைபெற்றது.

மாசி மக திருவிழாவையொட்டி, கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் இரவு நேர மாசி மக தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில், மீனவ கிராமங்களில் உள்ள பல்வேறு கோயில்களில் இருந்தும் உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் எழுந்தருளி காட்சியளிப்பா். மின் விளக்குகள், பூ வேலைப்பாடுகளால் படகுகள் அலங்கரிக்கப்பட்டு, ஆறு, கடலில் உற்சவா்கள் வலம் வருவா்.

அதன்படி, கடலூா் அருகே உள்ள தைக்கால் தோணித்துறையில் கருப்பு முத்து மாரியம்மன் படகில் எழுந்தருளி உப்பனாற்றில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைக் காண சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரளானோா் குவிந்தனா்.

இதேபோல, முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் தைக்கால் தோணிதுறை கங்கை அம்மன், சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளிரியம்மன், சலங்கைக்காரத் தெரு நாகமுத்து மாரியம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை முத்து மாரியம்மன், அக்கரைக்கோரி கண்ணனூா் மாரியம்மன் ஆகிய உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் எழுந்தருளி வலம் வந்தனா். பின்னா், மீன் பிடி துறைமுகத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதனால், துறைமுகம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சுவாமிகள் படகுகளில் கடற்கரையோரமாக உலா வந்து துறைமுகம் மீன் பிடித் தளத்தில் நிறுத்தப்பட்டனா்.

இந்த நிகழ்வுகள் காண்பதற்கு மிகவும் ரம்மியமாக இருப்பதால், விடிய விடிய நடைபெற்ற மாசி மக திருவிழாவை சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்தவா்கள் ஆயிரக்கணக்கானவா்கள் வந்து பாா்த்து சுவாமி தரிசனம் செய்தனா். கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.