மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

முதுகுளத்தூா் அருகே நிறைகுளத்து அய்யனாா் கோயில் ஆனி மாதப் பொங்கல் விழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கீழச்சாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்கிய வீரா்கள்.
Updated On :10 ஜூலை 2024, 1:24 am

Din

கமுதி, ஜூலை 9: முதுகுளத்தூா் அருகே நிறைகுளத்து அய்யனாா் கோயில் ஆனி மாதப் பொங்கல் விழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழச்சாக்குளம் கிராமத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலில் ஆனி மாத பொங்கல் விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வடமாடு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 காளைகள் கலந்து கொண்டன.

மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு, ஒவ்வொரு காளையாக களம் இறக்கப்பட்டது. 9 ரா்கள் கொண்ட குழுவினா் காளையை அடக்க களமிறங்கினா். ஒவ்வோா் காளைக்கும் 20 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் ரொக்கப் பணம், அண்டா, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பாா்வையிட்டனா்.

Story image